(0044) 190 867 1468
(0044) 208 549 8000
(0044) 788 149 2600

Kingston Health Centre   

31 London Road, Kingston, Surrey,
KT2 6ND, UK.

ஆட்டிசம் (Autism)

ஆட்டிசம் என்பது மூளை - தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல், மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஆட்டிசம் எனப்படும்.


இ‌த‌ன் மு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்‌சினை எ‌ன்னவெ‌ன்றா‌ல் இ‌ந்நோ‌ய் கு‌றி‌த்து மரு‌த்துவ உலகா‌ல் கூட இதுவரை ச‌ரிவர பு‌ரி‌ந்து கொ‌ள்ள முடிய‌வி‌ல்லை எ‌ன்பதுதா‌ன்.


ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்த குழ‌ந்தைக‌ள் ‌பிற‌ந்த 18 - 24 மாத‌த்‌தி‌ல் செ‌ய்ய வே‌ண்டிய ‌சி‌ன்ன ‌சி‌ன்ன செய‌ல்களை‌க் கூட செ‌ய்யாம‌ல் முட‌ங்‌கி இரு‌க்கு‌ம். அதாவது தா‌யி‌ன் முக‌த்தை அடையாள‌ம் காணுத‌ல், ‌சி‌ரி‌த்த‌ல், மழலை‌யி‌ன் ஒ‌லி எழாம‌ல் இரு‌ப்பது, அரு‌கி‌ல் ‌நி‌ன்று கூ‌ப்‌பி‌ட்டாலு‌ம் எ‌ந்த சலனமு‌ம் இ‌ல்லாம‌ல் இரு‌ப்பது, பொ‌ம்மைகளோடு கூட ‌விளையாட மறு‌த்த‌ல், கைக‌ளி‌ல் ஒரு ‌பிடி‌ப்‌பு‌த் த‌ன்மை இ‌ல்லாம‌ல் போவது போ‌ன்றவை ஆ‌ட்‌டிச‌ம் நோ‌யி‌ன் அ‌றிகு‌றிகளாகு‌ம்.


ஆ‌ட்‌டிச‌ம் எ‌ன்பதை ‌விள‌க்கமாக‌க் கூற வே‌ண்டுமானா‌ல் அது ஒரு நோய் அல்ல;. மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு த‌ன்னை‌ச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு. த‌ன்னை‌ச் சு‌ற்‌றி நட‌க்கு‌ம் எதை‌ப் ப‌ற்‌றியு‌ம் கவலை‌ப் படாம‌ல், த‌ங்களு‌க்கெ‌ன்று ஒரு த‌னி உலக‌த்தை உருவா‌க்‌கி‌க் கொ‌ண்டு அ‌தி‌ல் மூ‌ழ்‌கி ‌கிட‌ப்பா‌ர்க‌ள். ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ல் டி‌ஸ்ஆ‌ர்ட‌ர் எ‌ன்று ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் இ‌ந்த நோ‌ய் அழை‌க்க‌ப்படு‌‌‌கிறது.


இ‌ந்த நோ‌ய் பா‌தி‌த்த குழ‌ந்தைக‌ள் ம‌ற்றவ‌ர்களுட‌ன் உறவை‌ப் பேண முடியாது, ம‌ற்ற குழ‌ந்தைகளுட‌ன் இணை‌ந்து ‌விளையாடுத‌ல் போ‌ன்ற சாதாரண ‌விஷய‌ங்க‌ளி‌ல் கூட ஈடுபட முடியாது. பொதுவாக ஆ‌ட்‌டிச‌ம் பா‌தி‌த்த குழ‌ந்தைகளு‌க்கு பே‌ச்சு வருவ‌தி‌ல் ‌சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌ம். ‌சிலரு‌க்கு ந‌ல்ல முறை‌யி‌ல் பே‌ச்சு வருவது‌ம் உ‌ண்டு. ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் இ‌ப்படி‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று எ‌ந்த ஒரு வரையறையு‌ம் இரு‌ப்ப‌தி‌‌ல்லை. ஒ‌வ்வொருவரு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் செய‌ல்படுவது‌ண்டு.


ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌ப்‌பி‌ற்கு பெ‌ண்களை ‌விட ஆ‌ண்களையே அ‌திகமாக ஆ‌ட்டிச‌ம் நோ‌ய் தா‌க்கு‌கிறது.


ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்களை எ‌ப்படி பராம‌ரி‌ப்பது போ‌ன்ற அடி‌ப்படை ‌விஷய‌ங்க‌ள் கூட, மெ‌த்த படி‌த்தவ‌ர்களு‌க்கு‌ம் அ‌றியாத ஒ‌ன்றாகவே உ‌ள்ளது.

உட‌லிய‌ல் ப‌ரிசோதனைக‌ள் மூல‌ம் ஆ‌ட்டி‌ச‌ம் நோ‌ய் இரு‌ப்பதை க‌ண்ட‌றிய ==== .


‌சில அடி‌ப்படை அ‌றிகு‌றிகளை‌க் கொ‌ண்டு ஆ‌ட்‌டிச‌ம் நோ‌ய் இரு‌ப்பதை க‌ண்ட‌றிய முடியு‌ம். அ‌ப்படி ஆ‌ட்டிச‌ம் இரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்தா‌ல், அத‌ற்கான உ‌ரிய ‌சி‌கி‌ச்சை முறைகளை மே‌ற்கொ‌ண்டு, ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு ===


மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துகளின் குறைபாடு, 'செக்ரடின்' என்ற ஹார்மோன் குறைபாடு என பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் 'ஆட்டிசம்' ஒரு நோய் அல்ல .


இதற்கான வழிமுறைகள் குறைபாடுகளின் தன்மையைப் பொறுத்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பொறுத்தும் வேறுபடும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். எனவே, ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு முறையான ப‌யி‌ற்‌சி அ‌ளி‌த்து அவ‌ர்களையு‌ம் இய‌ல்பான வா‌ழ்‌க்கை வாழ வ‌ழி செ‌ய்யலா‌ம்.


ஆட்டிசம் அறிகுறிகள்

 • எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது.

 • கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது.

 • தனது விருப்பத்தைக் குறிக்க ஆட்காட்டி விரலைப் பயன்படுத்திச் சுட்டிக்காட்டாமல் இருப்பது.

 • சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது.

 • பயம், ஆபத்து போன்றவற்றை உணராமல் இருப்பது.

 • பாவனை விளையாட்டுக்கள் இல்லாமல் இருப்பது.

 • வித்தியாசமான நடவடிக்கைகளை, ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்வது.

 • தனது தேவைகளை உணர்த்த, பெரியவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது.

 • காரணமில்லாமல் அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது.

 • வலியை உணராமல் இருப்பது.

 • வித்தியாசமான நடவடிக்கைகள் - கைகளைத் தட்டுவது, குதிப்பது போல எதையாவது செய்துகொண்டிருப்பது.

 • வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு இல்லாமை.

 • சில வேளைகளில் தொடப்படுவதையோ, அணைக்கப்படுவதையோ விரும்பாமல் இருப்பது.

 • தினப்படி செயல்பாடுகளில் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. மாற்றங்களை அசவுகரியமாக உணருவது.

 • பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது.

 • பொருட்களைச் சுற்றிவிட்டு ரசிப்பது - அதற்குள்ளேயே மூழ்கிப் போவது.

 • எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது.

 • தன்னந்தனியே சிரித்துக்கொள்வது. சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது.

 • சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனித்து இருப்பது.


குழந்தை பிறந்த பின் – காது கேட்காமல் போவது, பேசாத்தன்மை, பார்வைக்குறைபாடு, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குறைபாடு போன்றவற்றை எளிமையாக கண்டுகொள்ள முடியும். ஆனால் ஆட்டிசம் அப்படி எளிமையாக வகைப்படுத்த முடியாதது.


1943ல் டாக்டர். லியோ கானர் (Dr. Leo Kanner) என்பவர்  உலகிற்கு ஆட்டிசம் என்ற வார்த்தையையே அறிமுகப்படுத்துகிறார். அவர் தனது “அன்பு வளையத்தை சிதைக்கும் ஆட்டிசம்” (Autistic Disturbances of Affective Contact) என்ற ஆய்வறிக்கையை நெர்வஸ் சைல்ட்(Nervous Child) என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். அதில்தான் உலகில் முதன் முதலாக ஆட்டிச பாதிப்புடைய குழந்தைகளின் பிரச்சனைகள் பேசப்பட்டது.


ஆனால், ஆட்டிசத்திற்கு காரணமாக கானர் கருதியதில் முக்கியமானது,  பெற்றோர்களின் அரவணைப்பை குழந்தைப் பருவத்தில் பெறாததினால் தான் இதன் பாதிப்பு ஏற்படுகிறது என்று பெரிதும் நம்பினார்.  முற்றிலும் தவறான கொள்கை என்று பின்னாளில் தெளிவாக நிறுவப்பட்டு விட்டது என்றாலும் ஆட்டிசம் எனும் குறைபாட்டை முதன் முதலாக வரையரை செய்தவர் என்கிற வகையில் டாக்டர். கானரின் பங்கு மகத்தானது.


ஆட்டிசம் என்ற வார்த்தைக்கு யதார்த்ததிலிருந்து விலகி ஓடுவது என்பதுதான் அகராதிப்படியான அர்த்தம். கானர் இவ்வகை குறைபாடுள்ள நோயாளிகள் அப்படி உண்மையை சந்திக்காது விலகி வாழ்வதாகக் கூட எண்ணியிருக்கலாம்.


சரியாக இதே நேரத்தில் டாக்டர். ஹான்ஸ் ஆஸ்பெர்ஜர் (Hans Asperger) என்பவரும் இதே வகைக் குறைபாடுகளை சற்றே வளர்ந்த பேச முடிந்த குழந்தைகளிடம் கண்டறிந்தார். 1944ல் அவர் ஜெர்மானிய மொழியில் இது குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். பிற்காலத்தில் ஆட்டிசத்தின் இவ்வகைக்கு (பேசக் கூடிய ஆனால் மற்றவர்களோடு பழகுதலில் சிரமம் உடைய) குறைபாட்டுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.


தவறான நம்பிக்கை:                         பையன்களுக்கு மட்டுமே ஆட்டிசம் குறைபாடு வரும்.

ஆட்டிசம் பெண்கள், பையன்கள் இருவரிடமும் காணப்படுகிறது. அதே சமயம், பெண்களுடன் ஒப்பிடும்போது பையன்களிடம் ஆட்டிசத்தை அதிகம் காண இயலுகிறது.


ஒப்புக்கொள்ளுதல் அவசியம்

எந்தவொரு பெற்றோருக்கும் தன்னுடைய குழந்தைக்கு ஒரு குறை இருக்கிறது என்று அறிய வரும்போது, பெருவாரியானவர்களின் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அதிலும் குறிப்பாக, ஆட்டிசம் மாதிரியான குறைபாடுகள் இருப்பதாக மருத்துவர்கள் சொல்லும்போது, உடனடியாக பெற்றோர் பலரும் அதை ஏற்க மறுத்துவிடுகின்றனர். மூன்று, நான்கு ஆண்டுகள் சென்றபிறகுதான், வெளியிடங்களில் இருந்து குழந்தை பற்றி வரும் புகார்களுக்குப் பின் தங்களுடைய குழந்தைக்குக் குறைபாடு இருக்கலாமோ என்ற எண்ணம் உருவாகி, அது வலுப்பெற்ற பின் மருத்துவரிடம் மீண்டும் வருகின்றனர். இதனை முன்னமே செய்திருந்தால், குழந்தைக்குக் கொடுக்கப்பட்டுவரும் தெரபிகளின் வாயிலாக குழந்தை முன்னேற்றப் பாதை நோக்கி பயணித்திருக்கும் என்று வருந்துகிறார்கள் மருத்துவர்கள். ஆனால் பெற்றோர் பலரின் தேவையற்ற ஈகோ, அதனைச் செய்யவிடாமல் தடுத்து விடுகிறது. ஆட்டிசம் மாதிரியான குறைபாடுகளை பயிற்சிகளின் வழியே கொஞ்சமேனும் ஒழுங்குசெய்ய இயலும். நாம் மறுத்துவிட்டு, இருக்கும் ஒவ்வொரு நாளும் அக்குழந்தையின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறோம் என்பதை நினைவுகொள்வது நல்லது.


பரிசோதனை, ஆய்வுக்கூடம்

பொதுவாக ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பதாகச் சந்தேகிக்கும் மருத்துவர், அக்குழந்தையை இன்னொரு உளவியல் மருத்துவரிடம் அனுப்பி வைப்பார். அங்கே அவர்கள் குழந்தையைப் பார்த்துவிட்டு, பெற்றோரிடம் பல்வேறு கேள்விகளை வரிசையாகக் கேட்பார்கள். நாம் சொல்லும் உண்மையான பதிலின் மூலம் குழந்தை எந்த நிலையில் உள்ளது என்பதைக் கண்டறிவார்கள். மஞ்சள் காமாலையோ, டைபாய்டு காய்ச்சலோ வந்தால் ரத்தம், சிறுநீர் ஆகியவற்றைப் பரிசோதனைக்குக் கொடுப்போம்.


 ரத்த சோதனை வழியாக ஆட்டிசத்தைக் கண்டுபிடிக்கும் வழக்கம் இ =======


சில குழந்தைகளுக்கு ஈ.ஈ.ஜி எடுக்கச்சொல்லி வலியுறுத்துவர். அதுவும்கூட, வலிப்பு போன்ற நரம்பியல் சார்ந்த சிக்கல்கள் ஏதேனும் பின்னாளில் வரும் வாய்ப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்குத்தான். அத்தகைய நரம்பியல் சிக்கல்களுக்கு மட்டுமே குழந்தைகளுக்கு மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.


பெற்றோர்/கவனிப்பாளரின் குழந்தை பற்றிய அவதானிப்புகளின் வழியேதான் ஆட்டிசத்தின் தீவிரம், அதற்கான சிகிச்சை முறைகள் போன்றவற்றைத் தீர்மானிக்க முடியும்.


சாதாரணமாகவே, இந்த மண்ணில் ஒவ்வொரு குழந்தையும் தனித் தன்மையானதுதான். ஆனால் ஆட்டிச நிலைக்குட்படும் குழந்தைகள், இன்னும் தனித்தன்மை உடையவர்களாக இருப்பார்கள். ஆட்டிச பாதிப்பின் தீவிரம், அது பாதித்திருக்கும் செயல்பாடுகள் போன்றவை ஒவ்வொரு குழந்தைக்கும் ஒப்பிடமுடியாத அளவு வேறுபட்டிருக்கும். எனவே, எல்லாக் குழந்தைகளையும் ஒரே வகுப்புக்குள் உட்காரவைத்து ஒரே பாடத்தை எழுதிப்போட்டு படிக்க வைத்து, தேர்வு நடத்தி, மதிப்பெண் கொடுக்கும் நம் கல்விமுறை போல பொதுமையான அமைப்புகள் ஒருபோதும் பொருந்தி வராது. ஒவ்வொரு குழந்தையையும் புரிந்துகொண்டு அவர்களின் பிரத்யேக திறனை பட்டை தீட்டவும், அவர்கள் பின்தங்கியிருக்கும் திறன்களை வளர்க்கவும் என தனிப்பட்ட திட்டங்களை (Individual learning plan) உருவாக்கிக் கொண்டு அதன்படி அக்குழந்தைகளை வளர்ச்சிப் படிநிலைகளில் ஏறச் செய்யவேண்டும்.


தவறான நம்பிக்கை:                 ஆட்டிசத்தைக் குணப்படுத்த முடியாது, அதற்கு எந்தச் சிகிச்சையும் இல்லை.

ஆட்டிசம் பிரச்னை கொண்ட குழந்தைகள் அதைச் சமாளிக்க உதவுவதற்காகப் பலவிதமான சிகிச்சைகள் மற்றும் பழக்க வழக்க மாற்றங்கள் உள்ளன. பெரும்பாலான குழந்தைகள் வளர்ந்து ஓரளவு சுதந்திரமாக இயங்கும் பெரியவர்களாக வாழ்கிறார்கள், அவர்களுடைய வாழ்க்கை எல்லாரையும்போலவே அமைகிறது. ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு IQ மிக அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. ஆகவே அவர்கள் இதைப் பயன்படுத்தித் தாங்கள் விரும்பும் துறையில் மிகப்பெரிய நிபுணர்களாகலாம்.       


தவறான நம்பிக்கை:                       ஆட்டிசம் கொண்ட குழந்தைகளால் எப்போதும் பேச இயலாது.

குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதை முன்கூட்டியே கண்டறிந்து பயிற்சி கொடுத்தால், அவர்கள் பிறருடன் தொடர்பு கொள்ளச்செய்யலாம்.


தவறான நம்பிக்கை:                ஆட்டிசத்தின் அறிகுறிகள் எல்லா குழந்தைகளிடமும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

ஆட்டிசம் என்பது பலதரப்பட்ட தன்மைகளைக் கொண்ட ஒரு குறைபாடு. காரணம், ஆட்டிசத்தின் அறிகுறிகள் மற்றும் தன்மைகள் பலவிதமான கூட்டணிகளில் அமைகின்றன, இவை வெவ்வேறு நபர்களை வெவ்வேறு விதமாகப் பாதிக்கின்றன. ஒவ்வொரு குழந்தையும் சந்திக்கும் சவால், மற்ற குழந்தைகளிடமிருந்து மிகவும் மாறுபட்டிருக்கும்.


தவறான நம்பிக்கை:                            மருத்துவர்களுக்கு ஆட்டிசத்தைப்பற்றி எல்லாம் தெரியும்.

மருத்துவத்துறையில் உள்ளவர்களில் சிலருக்குமட்டும்தான் ஆட்டிசத்தைப்பற்றித் தெரியும். பெரும்பாலான மருத்துவர்களுக்கு ஆட்டிசத்தைப்பற்றித் தெரிந்திருக்காது, அல்லது அதைக் கண்டறிவதற்கான திறன் இருக்காது. ஆகவே, பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளதா என்று அறிய விரும்பினால், அத்தகைய குறைபாடுகளைக் கண்டறிந்து குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரைச் சென்று சந்திப்பது நல்லது.