Kingston Health Centre   

31 London Road, Kingston, Surrey,
KT2 6ND, UK.

டிமென்சியா (Dementia)

டிமென்சியா என்றால் என்ன?

டிமென்சியா என்பது ஒரு தனிக்குறைபாடு அல்ல. மூளையின் திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்பட்டிருக்கிற சேதம் காரணமாக ஏற்படுகிற பல்வேறு அறிகுறிகளை இது உள்ளடக்கியிருக்கிறது. இந்தச் சேதத்தால் மக்கள் அல்சைமர்ஸ் அல்லது பார்க்கின்சன் போன்ற சிதைவுக் குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான அறிகுறிகள்: ஞாபக மறதி, மனநிலை மாற்றங்கள், சிந்தித்தல் மற்றும் புரிந்துகொள்ளுதலில் சிரமங்கள், பிரச்னைகளைத் தீர்க்க இயலாமல் சிரமப்படுதல், மொழிக் குறைபாடுகள் போன்றவை. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய தினசரி நடவடிக்கைகளைச் செய்ய இயலாமல் சிரமப்படுகிறார்கள்.


டிமென்சியா படிப்படியாக வளரக்கூடிய ஒரு குறைபாடு. அதாவது இந்தக் குறைபாடு கண்டறியப்பட்டபின் ஒருவருடைய நிலை படிப்படியாக மோசமாகி விரைவில் அவர்கள் மரணத்தைச் சந்திக்க நேரிடும்.


The Alzheimer’s Society (2015) அறிக்கைக்கு அமைவாக ஐக்கிய ராஜ்யத்தில் 850,000கும் மேலானவர்கள் டிமென்சியாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 40,000 பேருக்கு இளவயதிலேயே (65 வயதுக்கு கீழ்) டிமென்சியா ஏட்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேட்பட்டவர்களில் மூன்றில் ஒருவருக்கு டிமென்சியா இருக்கும் எனவும், டிமென்சியா உள்ளவர்களில் மூயொன்றில் இரண்டு பேர் பெண்களாய் இருப்பர் எனவும் அறிக்கை கூறுகிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க டிமென்சியா ஏட்படுவதற்கானஆபத்தும் அதிகரிக்கும். ஐக்கிய ராஜ்யத்தில் 2025 ஆம் ஆண்டளவில் ஒரு மில்லியனுக்கும் மேட்பட்டவர்கள் டிமென்சியாவினால் பாதிக்கப்பட்டு இருப்பர் எனக் கூறப்படுகிறது. உலக அளவில் 46.8 மில்லியன் பேர் டிமென்சியாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது 2030 ஆம் ஆண்டளவில் 75 மில்லியன் ஆகவும் 2050 ஆம் ஆண்டளவில் 130 மில்லியன் ஆகவும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.


வயதானவர்களுக்கு ஞாபகமறதிப் பிரச்னை வருவது சகஜம், அவர்களுடைய உடலில் ஏற்படும் நோய்கள் அல்லது மனச்சோர்வு போன்ற மனம் சார்ந்த பிரச்னைகளாலும் அவர்களுக்கு ஞாபகமறதி ஏற்படக்கூடும், இவை டிமென்சியா அல்ல.


டிமென்சியா பிரச்னை கொண்ட ஒருவருக்குக் குறைந்தபட்சம் இரண்டு மூளைச் செயல்பாடுகளில் சிரமங்கள் ஏற்படும் (ஞாபகமறதி மற்றும் தீர்மானம் எடுத்தலில் சிரமங்கள் அல்லது மொழிப் பிரச்னைகள்). இந்தக் குறைபாடு கொண்டவர்களால் தங்களுடைய தினசரிப் பணிகளைச் சுதந்திரமாகத் தாங்களே செய்துகொள்ள இயலாது.


டிமென்சியாவின் அறிகுறிகள் என்ன?

டிமென்சியாவின் அறிகுறிகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். அவர்களுடைய மூளையின் எந்தப்பகுதி எதனால் சேதமடைந்துள்ளது என்பதைப் பொறுத்து இந்த அறிகுறிகள் மாறும். டிமென்சியா பிரச்னை கொண்ட ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அறிகுறிகளை உணர்வார்கள், ஒவ்வொருவரும் சந்திக்கக்கூடிய சிரமங்கள் வெவ்வேறு விதமாக அமையும். டிமென்சியா பிரச்னை கொண்ட ஒருவர் பின்வரும் விஷயங்களில் சிரமத்தைச் சந்திக்கலாம்:

  • சமீபத்திய நிகழ்வுகள் அல்லது செயல்பாடுகளை நினைவில் வைத்திருத்தல்

  • விஷயங்களை விவரிப்பதற்குச் சரியான சொற்களைக் கண்டறிதல்

  • மக்கள் மற்றும் இடங்களை அடையாளம் காணுதல்

  • தினசரி வேலைகளான சமையல், சுத்தப்படுத்துதல் போன்றவற்றைச் செய்தல்

  • விஷயங்களைத் திட்டமிடுதல் மட்டும் ஏற்பாடு செய்தல் (நிதி விஷயங்களைக் கையாளுதல், வழக்கமான வேலைகள் போன்றவை)

  • தர்க்கரீதியில் சிந்தித்துப் பதிலளித்தல், குறிப்பாக நெருக்கடி நேரங்களில்

  • தனிப்பட்ட முறையில் தன்னைச் சரியாகப் பராமரித்துக் கொள்ளுதல் (குளித்தல், நேர்த்தியாக உடுத்துதல்)

  • மனநிலைகள் மற்றும் பழகுமுறைகளைக் கட்டுப்படுத்துதல், இதன் மூலம் ஏற்படக்கூடிய தீவிரத் தன்மை மற்றும் கிளர்ச்சியுணர்வு


சில குறிப்பிட்ட வகை டிமென்சியாக்களுக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் உண்டு:

  • அல்சைமர்ஸ்: அல்சைமர்ஸ் குறைபாடு என்பது ஒரு நரம்புச் சிதைவுப் பிரச்னை ஆகும். இதனைச் சரிசெய்ய இயலாது. இந்தக் குறைபாடு வந்தவர்களுடைய ஞாபகசக்தி, சிந்திக்கும் திறன்கள் மற்றும் பிற முக்கியமான மனம் சார்ந்த செயல்பாடுகளில் படிப்படியாகச் சரிவு காணப்படும். அல்சைமர்ஸ் என்பது ஒரு வகையான டிமென்சியா ஆகும், இது படிப்படியாக வளரக்கூடியது, அதாவது இந்தக் குறைபாட்டின் அறிகுறிகள் காலப்போக்கில் மோசமாகிக் கொண்டேதான் செல்லும், இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் தன்னுடைய தினசரிப் பணிகளைச் சரியாகச் செய்ய இயலாத நிலைமை ஏற்படும்.

  • லெவி பாடீஸ் கொண்ட டிமென்சியா: இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக விரிவான மாயத் தோற்றங்கள் தெரியும், இவர்கள் அடிக்கடி கீழே விழக்கூடும்.

  • பிரண்ட்டோடெம்பரல் டிமென்சியா: ஆளுமை மாற்றங்கள் அல்லது அசாதாரணமாக நடந்து கொள்ளுதல். பாதிக்கப்பட்ட நபர் பிறர் மீது எந்த அக்கறையும் காட்டாமல் இருக்கலாம், பிறரிடம் முரட்டுத்தனமாகவோ கடுமையாகவோ பேசலாம்.

  • வாஸ்குலர் டிமென்சியா: இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சித்தபிரமை ஏற்படலாம் அல்லது ஒரு புதிய அல்லது மோசமாகும் நோயினால் இவர்களுக்குக் குழப்பம் ஏற்படலாம்.


டிமென்சியா வருவதை குறைக்க கூடிய வழிமுறைகள்

டிமென்சியாவைத் தடுக்க இயலாது என்று தான் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அதே சமயம் டிமென்சியா வருவதைத் தாமதப்படுத்துவதற்கு நாம் சில விஷயங்களைச் செய்யலாம். இது பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முழுமையடையவில்லை, மேலும் பல விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது.


பின்வரும் வழிகளைப் பயன்படுத்தி ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம்:

  • மனத்தைச் சுறுசுறுப்பாக வைத்திருத்தல், இதற்கு மனத்தைத் தூண்டும் செயல்பாடுகள் பயன்படும்.

  • தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவை உண்ணுதல், அதன் மூலம் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருத்தல்.

  • தன்னார்வ செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்குபெறுதல். உதாரணமாக ஒரு பொது நோக்கத்திற்காகத் தன்னார்வலராகப் பணியாற்றுதல்.

  • பொழுதுபோக்கு ஒன்றைக் கற்றுக் கொள்வதற்காக ஒரு வகுப்பில் இணைதல் அல்லது நண்பர்கள், ஒத்த சிந்தனை கொண்டவர்களுடன் நேரம் செலவிடுதல் போன்றவை.

  • தினசரி நடவடிக்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட ஒழுங்கைப் பின்பற்றுதல்.

  • புகைப் பிடிப்பது, மது அருந்துவதை நிறுத்திவிடுதல்.


ஒருவருக்கு டிமென்சியா வந்திருப்பது கண்டறியப்படும்போது அவரும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைவது சகஜம். டிமென்சியாவின் ஆரம்பக் கட்டத்தில் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த ஆதரவும் நம்பிக்கையும் தேவை, அப்போதுதான் அவர்களுடைய வாழ்க்கை இயன்றவரை எளிதாகவும் சமாளிக்கக்கூடியதாகவும் அமையும்.


  • தகவல் தொடர்பு: அன்புக்குரியவரிடம் பேசும்போது கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசவேண்டும்.

  • உடற்பயிற்சி: டிமென்சியாவால் பாதிக்கப்பட்டவர் சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும் என்று ஊக்கப்படுத்தவேண்டும்,

  • விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகள்: விளையாட்டுகள் மற்றும் சிந்திக்கும் செயல்பாடுகளில் பங்கேற்குமாறு அவரை ஊக்கப்படுத்தவேண்டும்.

  • ஒழுங்கு: தினசரி நடவடிக்கைகளுக்கு ஒரு முறையான ஒழுங்கைக் கொண்டுவரவேண்டும், அதன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு உணவு அல்லது தூக்கக் குறைபாடு ஏற்படாது.

  • எதிர்காலம்: ஒருவர் டிமென்சியாவின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளபோது எதிர்காலத்திற்காகத் திட்டமிடுமாறு அவரை ஊக்கப்படுத்தவேண்டும்.